சொதப்பிய பிளான்..லெஃப்ட் ரைட் வாங்கிய அமித்ஷா? பம்மிய தமிழக பாஜக தலைவர்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பிடிக்க வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்த பாஜக, தேர்தலுக்கு ஒரு ஆண்டு முன்பே அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவித்து விட்டது.

ஆனால், தமிழக பாஜகவுக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவது, போலியான பூத் கமிட்டி விவகாரம், மற்றும் சில தலைவர்கள் தனிப்பட்ட அணிகளை உருவாக்கியிருப்பது ஆகியவை தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, “அதிமுக கூட்டணியை விமர்சிக்கக் கூடாது. எந்த காரணத்தாலும் கூட்டணிக்குள் பிளவு வரக் கூடாது. தமிழக பாஜகவுக்குள் கோஷ்டி மோதல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

கூட்டணியை பாதிக்கக்கூடிய எந்தவொரு கருத்தும் பொதுவில் தெரிவிக்கக் கூடாது என்பதையும், சமூக வலைதளங்களில் கட்சித் தலைவர்களை விமர்சிப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட்டதையும் அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

அதோடு, போலியான பூத் கமிட்டி விவகாரம் குறித்து கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மாவட்டங்களில் உண்மையில் கமிட்டிகள் இல்லாத போதிலும், பெயர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதோடு, தொடர்பு கொண்ட எண்களில் சிலர் “நாங்கள் வேறு கட்சியில் இருக்கிறோம்” என்று கூறியதும், தலைமை அதிர்ச்சியடைந்ததற்குக் காரணமாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களுக்குள் அனைத்து அமைப்பு பணிகளையும் முடித்து, ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் தயாரிப்பை முடிக்க வேண்டும் என்று அமித்ஷா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அடுத்தடுத்து தலைமை நேரடியாக கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜகவில் உள்ளக ஒற்றுமை மற்றும் அதிமுக கூட்டணியின் நிலைத்தன்மை என்பது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah bought the Left and the Right Tamil Nadu BJP leaders are in trouble What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->