சீனா, பாகிஸ்தானுக்கு மொத்தமாக ஆப்பு.. அமெரிக்காவின் இந்தியா விசிட்.. வயித்தெரிச்சல் சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய பாதுகாப்பு துறையுடன் அமெரிக்கா ஒப்பந்தங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று இரண்டு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. 

ஏற்கனவே இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதல் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியாவிற்கு வருகைதர இருக்கிறார். 

இந்த சந்திப்பு டெல்லியில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். முன்னதாக ட்ரம்ப் இந்தியாவிற்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாக வந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய பேச்சுவார்த்தைக்கு பின்னர் பல பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆசிய கண்டத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகவும், சர்வதேச சக்தியாக இந்தியா உருவாகும் நாளினை நோக்கி அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் பாராட்டப்பட்டுள்ளது. 

துவக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கு அமெரிக்கா நட்புறவு பாராட்டி, சீனாவிற்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வந்ததே பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணம் மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் விபரங்கள் மேலும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு வயிறெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America - India Officials Meeting and Signature Assignment about Defense


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal