'பாஜகவில் திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி இணைந்துள்ளனர்; இந்தத் திருடர்களின் தலைவன், ஜெய் ஷாவின் தந்தை'; சர்ச்சையாக பேசிய கன்னையா குமார்; எதிர்வினையாற்றும் பாஜக..!
All thieves have gathered and united within the BJP says Kanhaiya Kumar
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெற்றது. அங்கு ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது போங்கைகான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமார் பிஜேபி குறித்து பேசியுள்ளமை சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், ''திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஜகவில் இணைந்து விட்டனர். இந்தத் திருடர்களின் தலைவன், ஜெய் ஷாவின் தந்தையாவார். ஊடுருவல் ஒரு பிரச்சனை என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கூறினார். அதற்கு நான், இங்கே மிகப்பெரிய ஊடுருவல்காரர் குஜராத்திலிருந்து வந்துள்ளார். ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் சேர்த்து அவரையும் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்' என்று பதிலளித்தேன்..." என்று கன்னையா குமார் கூறியதற்கு தற்போது பாஜக எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளது.
இந்த சூழலில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில் கூறியதாவது; ''இம்முறை முதல் முறையாக, நமது மக்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்களிக்க வெளியே வந்துள்ளனர். பல வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு 95 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது சாதாரணமானதல்ல.'' என்று புறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''அசாம் மொழி மற்றும் சாதியைக் கடந்து உயர்ந்துள்ளது. சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மக்கள்தொகை ஆக்கிரமிப்பிலிருந்து நமது நிலம், நமது அடையாளம் மற்றும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே தெளிவான உறுதியுடன் நமது மக்கள் வாக்களித்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
All thieves have gathered and united within the BJP says Kanhaiya Kumar