'ஒடிசாவில் 05 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராயின் 'நிம்​புடா நிம்​பு​டா' பாடல் சர்ச்சை'; அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்​தில் அண்​மை​யில் 05 ஆம் வகுப்பு மாணவர்​களுக்​கான, அரசுப் பாடப் புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன. அந்​தப் பாடப்​புத்​தகத்​தில் முன்னாள் உலாகி அழகியும், நடிகையான ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999-ஆல் வெளி​யான 'ஹம் தில் தே சுகே சனம'  என்ற படத்​தில் இடப்பெற்ற 'நிம்​புடா நிம்​பு​டா' பாடல் இடம்​பெற்​றுள்​ளது. 

மாணவர்கள் படிக்கும் பாட புத்தகத்தில் சினிமா பாடலா? என சமூக வலைத்தளங்களில் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, பள்ளி மாணவர்​கள் பயிலும், பாடப் புத்​தகத்​தில் திரைப்​படப் பாடல் அச்​சிடப்​பட்​டது எப்​படி? என்று கல்​வி​யாளர்​கள் உள்​ளிட்ட பலரும் கேள்வி​கள் எழுப்பியுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கை (NEP) கட்டமைப்பின் கீழ், 2026-27 கல்வியாண்டிற்கான ஒடிசாவின் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் 1,678 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனை பிழைகளுடன் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்றும், பள்ளி கல்வித்துறையின் இச்செயலால் ஒடிசா முழுக்க பெரும் சர்ச்சையான நிலையில் பிழைகள் சரிசெய்யப்பட்டு, திருத்​தப்​பட்ட பாடப்​புத்​தகங்​கள் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்​றும் மக்​கள் கல்​வித் துறை அமைச்​சர் நித்​யானந்த கோண்ட் தெரி​வித்​துள்ளார்.

அத்துடன், இந்த அச்சுப் பிழைகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையான ஆசிரியர் பயிற்சி மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் முன்னாள் இயக்குநர் உட்பட 04 அதிகாரிகள், மூன்று உதவி இயக்குநர்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், பாட புத்தக்கத்தில் இடம்பெற்ற 'நிம்​புடா நிம்​பு​டா' பாடல் தொடர்பாக மற்ற 06 அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aishwarya Rai Nimbuda Nimbuda song in 5th class textbook controversy in Odisha


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->