டாக்ஸிபாட் சேவையை பயன்படுத்தும் ஏர் இந்தியா நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


டாக்ஸிபாட் சேவையை பயன்படுத்தும் ஏர் இந்தியா நிறுவனம்.!

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏர் இந்தியா, உலகிலேயே முதன்முதலில், ஏர்பஸ் ஏ320 விமானத்தில் டாக்ஸிபாட்டைப் பயன்படுத்தி பயணிகளுடன் வணிக விமானத்தை இயக்கியது.

இந்த நிலையில், ஏர் இந்தியா தனது ஏர்பஸ் ஏ320 குடும்ப விமானங்களுக்காக டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் டாக்ஸிபாட் செயல்பாடுகளை தொடங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக KSU ஏவியேஷன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஏனென்றால் டாக்ஸிபாட்டை ஏற்றுக்கொள்வதன் மூலம் வருகிற மூன்று ஆண்டுகளில் எரிபொருள் நுகர்வு சுமார் பதினைந்தாயிரம் டன்கள் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது, "ஒரு பொறுப்பான விமான நிறுவனமாகவும், நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து பல வழிகளைத் தேடி வருகிறது. 

KSU ஏவியேஷன் உடனான இந்த ஒத்துழைப்பு, டாக்ஸிபாட்டின் திறன்களை சிறப்பாக மதிப்பிடுவதற்கு எங்களை அனுமதிக்கும். மேலும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மற்றும் பிற விமான நிலையங்கள் முழுவதும் டாக்ஸிபாட்டை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight company use taxibot


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->