விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதில் முதலிடம் பிடித்த ஏர் இந்தியா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் நேர செயல்திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. 

அதன் படி, இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் உள்ளது. 

அதேபோல், இந்தாண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 9.88 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விமானத்துறை 59.16% வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1.14 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும் டிஜிசிஏ தரவு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, குறைந்த விலை விமான சேவைகளில், ஸ்பைஸ்ஜெட் தனது சந்தைப் பங்கை 7.3 சதவீதத்தில் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், அதே சமயம் கோ பர்ஸ்ட் கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.9 சதவீதமாக இருந்து அக்டோபர் மாதத்தில் 7 சதவீதமாக அதன் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india company first place for airplane operate on the time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->