இந்தி மொழி கல்விக்கு ஓகே சொன்ன இரண்டாவது மாநிலம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தியை மத்திய பாஜக அரசு திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பாஜக தரப்பிலிருந்து ஹிந்தியை மட்டுமல்ல அனைத்து பிராந்திய மொழிகளையும் கற்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மூன்றாவது மொழி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆளும் திமுக அரசு இந்திய எதிர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியது. மேலும் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொழி பிரச்சனையின் காரணமாக பாஜக அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை இந்திய மொழிகளில் துவங்க பாஜக முடிவு செய்துள்ளது. மத்திரபிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பை துவங்க பாடப்புத்தகங்களை வெளியிட்டது பாஜக. புதுச்சேரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பு துவங்கப்படும் எனவும் அதற்கான புத்தகம் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்து இருந்தார். 

தற்பொழுது உத்திரபிரதேச அரசும் இந்தி வழி கல்வியை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. இது குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தி மொழி கல்விக்கு உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது. ஹிந்தி மொழி பாடப்புத்தகங்கள் மற்றும் அதற்கான நடைமுறை சாத்திய கூறுகளை தற்பொழுது ஆராய்ந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்நிலைக் கல்வி ஹிந்தி மொழியில் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹிந்தி வழி கல்வி மத்திய பிரதேசத்தில் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தற்பொழுது உத்தரபிரதேச அரசும் இந்திமொழி வழிக் கல்விக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தாய் மொழியில் உயர் கல்வியை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adityanath has agreed to Hindi language higher education in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->