கதாநாயகனாக களமிறங்கும் நடிகை சதீஷ் - வெளியானது புது அப்டேட்.! - Seithipunal
Seithipunal


கதாநாயகனாக களமிறங்கும் நடிகை சதீஷ் - வெளியானது புது அப்டேட்.!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். இவர் மதராசபட்டினம், நய்யாண்டி, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் நாய்சேகர், வித்தைக்காரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சதீஸ் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை செல்வின் ராஜ் ஜேவியர் இயக்குகிறார்.

இந்த படத்தில் சதீஸ் உடன் ரெஜினா, வெங்கட் மாணிக்கம், நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்திற்கு "கான்ஜுரிங் கண்ணப்பன்" என்று தலைப்பு வைத்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sathish act new movie conjuring kannappan


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->