திருமண நிகழ்வுக்குச் சென்றபோது விபத்து..8 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!
Accident while going to a wedding Eight people killed in road accident
திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிபோது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் 10பேர்பயணம்செய்துகொண்டிருந்துள்ளனர்.இந்தநிலையில் கார் சமேலி பகுதி அருகே வந்துகொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.பலத்த சத்தத்துடன் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த பயங்கர கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயமடைந்த மேலும் 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான அனைவரும் ஆண்கள். அவர்கள் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிபோது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8பேர் பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accident while going to a wedding Eight people killed in road accident