அகமதாபாத் விமான விபத்து குறித்து ஏ.ஏ. ஐ.பி மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் பதிலளிக்க மறுப்பு...! - Seithipunal
Seithipunal


அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் கடந்த மாதம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமான கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

இதுகுறித்து விமானிகள் பரிசோதித்ததில் தரையிறங்கும் கியர் பயன்படுத்தப்பட்டது மற்றும் விமான இறக்கைகள் சரியாக செயல்படாதது மட்டும் விமான விபத்துக்கு காரணமல்ல என்பதை கண்டு பிடித்துள்ளனர்.இது அவசரகாலத்தில் பயன்படும் பவர் டர்பைன் செயலிழந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என விசாரிக்கும் இந்தியாவின் விசாரணை அமைப்பான ஏ.ஏ.ஐ.பி. வேறு ஒரு கோணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது.

இவ்விமானம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 எஞ்சின்களால் இயக்கப்பட்டது. மேலும், விமானம் புறப்பட்ட பிறகு உயரத்தை அடைய சிரமப்படுவதையும் பின்னர் கீழே விழுந்து நொறுங்கியதையும் விமான விபத்தின் வீடியோ பதிவுகள் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஏ.ஏ.ஐ.பி.-யிடம் எந்த கேள்விகளையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில்," ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும் விசாரணை குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளது.மேலும், ஏ.ஏ.ஐ.பி. மற்றும் ஏர் இந்தியா நிறுவனமும் இதுகுறித்து பதிலளிக்க மறுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AAIP and Air India refuse to comment on Ahmedabad plane crash


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->