சுற்றுலாவுக்கு வாடகை டாக்சியில் சென்ற இளம்பெண்ணை சீரழிக்க முயன்ற டிரைவர்: விடிய விடிய காட்டிற்குள் துரத்தி நடந்த பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் கடந்த 05-ஆம் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலுக்கு தனியாக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளார். நள்ளிரவு 11 மணியளவில் காத்கோடமில் இருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்த்து சென்றுள்ளார்.

அந்த காரை ஹல்த்வானியைச் சேர்ந்த தீபக் சிங் போரா (39) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கடந்த 06-ஆம் தேதியன்று அதிகாலை 01.30 மணியளவில் நைனிடாலுக்கு 10 கி.மீ தொலைவில் உள்ள பல்டியாக்கான் பகுதியில் கார் சென்றபோது, டிரைவர் திடீரென ஆள்நடமாட்டமற்ற பட்வா டங்கர் பகுதிக்கு காரைத் திருப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த போது, டிரைவர் அந்த பெண்ணை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். டிரைவரிடமிருந்து தப்பிக்க போராடிய அந்த பெண், காரில் இருந்து குதித்து அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணை டிரைவர் துரத்தியும் சிக்காமல் இரவு முழுவதும் காயங்களுடன் காட்டில் மறைந்திருந்து உயிர் தப்பியுள்ளார். விடிந்த பிறகு பட்வா டங்கர் கிராமத்திற்கு வந்த அந்த பெண்ணை உள்ளூர் பெண்கள் மீட்டு தாலிட்டல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து நைனிடால் எஸ்எஸ்பி மஞ்சுநாத் டிசி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி உதவியுடன் குற்றவாளியை தேடியதாகவும், அந்த காரை பறிமுதல் செய்து, தலைமறைவாக இருந்த தீபக் சிங் போராவை போவாலி பகுதியில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A taxi driver in Uttarakhand has been arrested for attempting to molest a young woman who was traveling in a taxi for a tourist trip


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->