கணவனின் கழுத்தை பெல்ட்டால் நெறுக்கி கொன்ற மனைவி; போலீசார் கண்முன் ஊர் மக்கள் செய்த செயலால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டரா அருகே செறும்பூடு பகுதியைச் சேர்ந்த ராஜு எட்வேர்ட் (56) என்ற நபருக்கும், அவரது மனைவி லேகா மேரிக்கும் (48) இடையே குடும்பச் சொத்தை மனைவி லேகாவின் பெயருக்கு மாற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்த சூழலில், சம்பவ தினமாக கடந்த அக்டோபர் 02 அன்று அதிகாலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, லேகா மேரி தனது கணவர் ராஜுவின் கழுத்தில் பெல்ட்டை கொண்டு இறுக்கி நெரித்துக் படுகொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது ராஜு திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளார்அத்துடன், கனவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிசெய்துள்ளனர்.

எனினும், அவரது கழுத்தில் சந்தேகத்திற்குரிய தழும்புகளைக் கண்டு குண்டரா போலீசாருக்குத் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து ராஜுவின் உறவினர்களும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லேகா மேரி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த லேகா மேரியை, போலீஸார் விசாரணை மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பதற்காக மீண்டும் சம்பவ இடத்திற்கு (அவரது வீட்டிற்கு) அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கடும் ஆத்திரமடைந்து, லேகா மேரிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அத்துடன், மக்கள் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசி தங்கள் கடுமையான எதிர்ப்பைப் காட்டினர்.

இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவிய நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தக் கொலையில் லேகா மேரியின் ஆண் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கேரள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A stir was caused by the actions of local residents carried out right before the eyes of the police against a woman who had killed her husband in Kerala


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->