குறட்டை விட்ட தந்தை.. பொறுக்க முடியாத மகன் எடுத்த விபரீத முடிவு.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபிட் மாவட்டத்தில் தந்தை ஒருவர் குறட்டை விட்ட காரணத்தால், மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

ராம் ஸ்வரூப்பிற்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் நவீன், இளைய மகன் மனோஜ். சம்பவ தினத்தன்று மனோஜ் தனது தாயுடன் மாமா வீட்டிற்கு சென்று இருக்கின்றான். இந்தநிலையில், நவீன் உறங்குவதற்காக சென்றபொழுது தந்தையின் குறட்டை சத்தம் அதிகமாக கேட்டிருக்கிறது. 

இதனால் எரிச்சலடைந்த நவீன் அருகிலிருந்த கனமான பொருளை கொண்டு, அவரை சரமாரியாக தாக்கி இருக்கின்றார். இதனால் ராம் ஸ்வரூப் காயமுற்று அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பப்பட்டது. பின்னர், ராம் ஸ்வரூப்பின் இளைய மகன் மனோஜ் தனது மூத்த சகோதரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a son killed his father in uttar predesh


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->