மாமியார் மீது மருமகன் காதல்... மனைவி படுகொலையில் கணவன் சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


மாமியார் மீது மருமகன் காதல் கொண்டதால் அதை தட்டி கேட்ட மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டட்ததில் நாக்ளா பார்சி கிராமத்தில் வசித்து வந்த  பிரமோத் மற்றும் இளம் பெண்   ஷிவானிக்கும் கடந்த  2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதனை அறிந்த ஷிவானி அதிர்ச்சி அடைந்து தனது , கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அதனை அவர் கண்டு கொள்ளாமல் கணவர் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மனைவி ஷிவானியின் உறவினர்களும் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் வராண்டாவில் மனைவி ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனை கவனித்த ஷிவானியின் மாமா போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு என பரவலாக புரளி பரவிய நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில், இந்த ஆபாச புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A son-in-law's love for his mother in law How did the husband get caught in the wifes murder?


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->