#ராஜஸ்தான் || நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக வாட்ஸப் ஸ்டெடஸ்.. சக ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது..! - Seithipunal
Seithipunal


நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக சக ஊழியரை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்,

தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. இந்நிலையில், நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்த ராஜஸ்தானை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியடுது.

இதற்கிடையில், ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வெளியிட்டதற்காக சக ஊழியரின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகேந்திர சிங் என்பவரைசக ஊழியரும் வழக்கறிஞரின் எழுத்தரும் ஆன சோஹைல் கான் என்பவர் நுபுர் சர்மாவை ஆதரித்து வாட்ஸ் ஸ்டெடஸ் வைத்ததற்காக கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனை அடுத்து,மகேந்திர சிங் ராஜ்புரோஹித் அளித்த புகாரின் அடிப்படையில் சோஹைல் கானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man arrested who threatening his friend


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->