1918 ஸ்பானிஷ் காய்ச்சல்.. இன்று கொரோனா.. 106 வயதிலும் வெற்றி கண்ட முதியவர்.!! - Seithipunal
Seithipunal


106 வயது நபர் ஸ்பேனிஷ் காய்ச்சலில் இருந்து தப்பி, கோவிட்டிற்கும் டாட்டா காண்பித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 1918 ஆம் வருடத்தில் பரவி, இதே கொரோனா போல உலக நாடுகளை கடுமையான அளவு உலுக்கி எடுத்த ஆட்கொல்லி நோய்களில் ஸ்பானிஷ் ஃப்ளு (Spanish Flu) யாராலும் மறக்க இயலாத நோயாகும். இன்றுள்ள பெரும்பாலானோருக்கு தெரிந்தது எபோலா, பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படும் சுவைன் ஃப்ளு (Swine Flu) போன்றவை ஆகும். 

ஆனால் கடந்த 1918 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா கிட்டத்தட்ட 2 வருடங்கள் 2 மாதங்கள் மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்த நோய் 500 மில்லியன் பேரை பாதித்துள்ளது. சராசரியாக 19 மில்லியனில் இருந்து 50 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒரு ஆட்கொல்லி நோயாகும். இன்றைய கொரோனா போலவே அதிதீவிரமாக பரவிய ஸ்பானிஷ் ஃப்ளுவை கட்டுக்குள் வைக்க அன்றே மாஸ்க் போன்றவை உபயோகம் செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள முகுந்தர் அஹ்மத் என்ற 106 வயது முதியவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டு, பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், முகுந்தர் அஹ்மத்திற்கு அவரது 4 வயதில் ஸ்பானிஷ் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு இப்போது 106 வயதாகிறது. எனக்கு 4 வயது இருக்கும் போது உலகமே கடந்த 1918 ஆம் வருடம் பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலால் நானும் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்தும் மீண்டேன். இப்போது கொரோனாவின் தாக்கத்தில் இருந்தும் மீண்டுள்ளேன் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Delhi old man infected and recover 1918 Spanish Flu in 4 year child and now corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->