தொடர் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் - ஒரே மாதத்தில் 894 பயணிகளுக்கு அனுமதி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 5ஆம் தேதி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின், பிசினஸ் வகுப்பில் பெண் பயணி ஒருவர் டிக்கெட் எடுத்துள்ளார்.

ஒரு தொழில் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான இவருக்கும் விமான ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமானம் தெரிவித்ததாவது:-

பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய இருந்த பெண் பயணி ஒருவர், ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், பின்னர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்றுக்கொண்டு மற்றொரு விமானத்தில் அவரை அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ’கடந்த ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது’ என்றுத் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

894 passengers denied entry in air india flight


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->