அடுத்த பரபரப்பு.. "3000 ஆபாச வீடியோக்கள்" .. கோதாவில் குதித்த மகளிர் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட தேர்தலில் 2 கட்டத் தேர்தல் முடிவடைந்து உள்ள நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் முடிவற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

கர்நாடக மாநிலம் அசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனா இவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதற்கிடையே பிரஜ்வால் மீது பாலியல் புகார் இறந்ததோடு அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவரது தந்தை இறைவன் நாம் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதில் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக மாநில போலீசாருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. விவகாரம் தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's commission enquiry in brajwal revanna case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->