ஆந்திரா: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தொடேரு அருகே உள்ள சாந்தி நகர் குக்கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், மீன்பிடி படகில் ஏரியை சுற்றி பார்ப்பதற்கு சென்றுள்ளனர். அப்பொழுது படகு சிறிது தூரம் சென்றபோது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பத்து பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் , நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நான்கு பேர் நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணுரு கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18) மற்றும் அல்லி ஸ்ரீநாத் (18) என அடையாளம் காணப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீதமுள்ள நான்கு பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் வாரம் தாங்க முடியாமல் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நெல்லூர் கிராமப்புற டிஎஸ்பி பி.வீரஞ்சநேய ரெட்டி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed in Boat capsizes in Lake in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->