பிள்ளைக்கு ஜீவனாம்சம் கேட்ட பெண் - ரூ.50 லட்சம் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து அந்த பெண் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

அதே சமயம் தன்னுடைய மகனின் கல்வி செலவுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. 

அப்போது, அந்த பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது மனுதாரரின் கணவர் மாதம் ரூ.2¼ லட்சம் சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமல்லாமல், அவரது குடும்பத்திற்கு சொந்தமான கட்டிடங்களில் இருந்து வாடகை மூலமாகவும் பல லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆகவே மனுதாரரின் மகன் கல்வி செலவு மற்றும் எதிர்காலத்திற்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். 

இதற்கு அந்த பெண்ணின் கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாத சம்பளத்தை அடிப்படையாக வைத்து கொண்டு ஜீவனாம்சம் வழங்க சாத்தியமில்லை" என்று வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "அந்த பெண் பணியாற்றுவதுடன், மாதம் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார். இதனால் மாதந்தோறும் குடும்ப செலவுக்காக கணவர் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், மகனின் கல்விச் செலவுக்காக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்" என்று உத்தரவு விட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 lakhs maintenance amount given to woman karnataga high court order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->