ஆந்திர முதல்வரை தாக்கிய சம்பவம்.. 5 பேர் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள நிலையில் அம் மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவ்வாறு இருந்த தினங்களுக்கு முன்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் ஜெகன்மோகன் ரெட்டியின் நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில போலீசார் அறிவித்திருந்தனர்.

ஆந்திர மாநில போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கல் வீசியவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் விஜயவாடா அருகே உள்ள சிங் நகர் பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை ஆந்திர மாநில போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தரையில் பதிக்க பயன்படுத்தப்படும் டைல்ஸ் துண்டுகளை ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் மீது வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கைதான சதீஷ்குமார், ஆகாஷ், துர்கா ராவ், சின்னா, சந்தோஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 person arrested by Andhra police attack on Jagan Mohan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->