ஜார்கண்டில் என்கவுண்டர்.! 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் சத்ராவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள லாவலாங் காவல் எல்லைக்குட்பட்ட சத்ரா பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் இணைந்து நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த அதிரடி என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இரண்டு நக்சலைட்டுகளிடமிருந்து தலா ரூ. 25 லட்சமும், மற்ற இருவரிடம் தலா 5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜார்கண்ட் போலீசார் தெரிவித்தனர். இதற்கு முன்பாக சத்தீஷ்கர் மாநிலத்தின் காங்கர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் நேற்று பெண் உட்பட ஐந்து நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 naxalites killed in encounter in jharkhand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->