ஆலப்புழா : லாரி மீது கார் மோதி விபத்து - 5 இஸ்ரோ கேன்டீன் ஊழியர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ஆலப்புழா அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் இஸ்ரோ கேண்டின் ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்து வந்தவர்கள் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் 1:30 மணியளவில், ஆந்திராவில் இருந்து ஆலப்புழா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். விபத்தில்  இறந்தவர்கள் பிரசாத், ஷிஜு, அமல், சச்சின் மற்றும் சுமோத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 ISRO canteen employees killed in car lorry accident in Alappuzha


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->