பக்தர்களே உஷார்.. திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்று இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளங்களில் போல போலியாக சில இணையதளங்கள் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. அதன்படி சுமார் 40 போலி இணைதளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானத்தின் மொபைல் செயலியை பயன்படுத்துமாறும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 fake website in Thirupathi temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->