பல லட்சம் மதிப்புள்ள தக்காளி லாரி கவிழ்ந்து விபத்து.. போலீஸ் பலத்த பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் 22 லட்சம் மதிப்புள்ள விபத்துக்குள்ளான தக்காளி லாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செய்து வரும் கனமழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தக்காளிக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. 

அதன் காரணமாக நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த தக்காளி வியாபாரிகள் தென்னிந்தியாவிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் கோளாறில் இருந்து 22 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று டெல்லியை நோக்கி சென்றது.

அதன்படி, இந்த தக்காளி லாரியில் 638 பெட்டிகளில் 16 டன் எடையுள்ள தக்காளி ஏற்றிக்கொண்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் சிதறி விழுந்தன. இதனைக் கண்ட பகுதி மக்கள் சாலையில் விழுந்து கிடந்த தக்காளிகளை எடுத்து செல்ல முயற்சி செய்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் துப்பாக்கியுடன் அங்கு சென்றனர். மேலும் லாரி சுற்றி நின்று தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு தக்காளி பெட்டிகளை அதில் ஏற்றி பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவதால் தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 lakhs tomoto lorry accident in Hyderabad


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->