இந்தியாவில் அடுத்ததாக தடம்பதிக்க இருக்கும் 6G தொழில்நுட்பம்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 6G தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். 

2017 ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி சமூக பிரச்சனைகள் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 75000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மையங்களில்  நடந்தது.

 இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளிக்காட்சியின் மூலம் உரையாற்றினார். 

இதில்,காணொளி மூலம் பேசிய நரேந்திர மோடி, கடைசி ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் இந்திய பல்வேறு துறைகளில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பல துறைகளில் புரட்சிகள் நடந்துள்ளன. தொழில் நுட்பத்துறை, விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புரட்சி ஏற்பட்டு அவைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளதாக" அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 75000 மற்றும் 50000 வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2030 year 6G technology to be launched in India


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->