ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டாரில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று காலை 7:30 மணியளவில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற என்கவுண்டரில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு, கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 soldiers killed and 4 injured in terrorist Attack in Jammu Kashmir rajouri


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->