ஆசை வார்த்தையில் சிக்கிய 180 பெண்கள்... 350 வீடியோக்கள்...! - வசமாக சிக்கிய இளைஞர் கைது மற்றும் வீடு இடிப்பு...! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரையே பதறவைத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற இளைஞர், வாட்ஸ்அப், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களை துஷ்பிரயோகம் செய்து, இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை குறிவைத்து திட்டமிட்டு அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் இனிமையான பேச்சால் நெருக்கம் ஏற்படுத்தி நம்பிக்கை பெற்ற அவர், பின்னர் அவர்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு, அந்த தருணங்களை மறைமுகமாக வீடியோவாக பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆபாசக் காட்சிகளை காட்டி பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டும் இருப்பது இந்த சம்பவத்தின் கொடூரத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்ததையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் அனில் போண்டே, மாவட்ட எஸ்.பி. விஷால் ஆனந்திடம் அவசர புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு, குற்றச்சாட்டுக்குட்பட்ட முகமது அயாஸை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலதிக விசாரணைக்காக அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த காவலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதில் சுமார் 180 சிறுமிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீடியோக்கள் யாருக்கெல்லாம் பகிரப்பட்டுள்ளன, பின்னணியில் மேலும் எத்தனை பேர் தொடர்புடையவர்கள் உள்ளனர் என்பதைக் கண்டறிய காவலர்கள் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என எம்.பி. அனில் போண்டே வலியுறுத்தியதுடன், அதில் தாமதம் ஏற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், குற்றச்சாட்டில் சிக்கிய முகமது அயாஸின் வீட்டில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அந்த வீட்டின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரவீன் தயாடே முன்னிலையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் பரத்வாடா மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான கடும் எச்சரிக்கையாக இந்த சம்பவம் மாறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

180 women caught word desire 350 videos Youth caught act arrested and house demolished


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->