15 -18 வயதுடைய சிறுவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் 2வது தவணை தடுப்பூசி-சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த சில நாட்களாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 15 வயதுக்கு மேற்பட்டோர் சிறுவர்களுக்கும் 2 தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15 -18 வயதுடைய சிறுவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சிறுவர்கள் விரைவில் செலுத்த மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 to 18 year old students 28 days period of 2nd dose vaccination


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->