இமாச்சலில் சோகம்; டாடா சுமோ வாகனத்தின் மீது பாறை உருண்டு விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; இருவர் காயம்..! - Seithipunal
Seithipunal


இமாச்சல் பிரதேசத்தில் டாடா சுமோ வாகனத்தின் மீது பாறை உருண்டு விழுந்த விபத்த்துக்குள்ளானதில் அதில் சென்ற 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல், சம்பா மாவட்டத்தில் கில்லார் - உதய்பூர் சாலையில் அமைந்துள்ள பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் டாடா சுமோ வாகனம் ஒன்று பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறைகளில் ஒன்று, இந்த வாகனம் மீது விழுந்த்துள்ளது. இதில் வாகனம் முழுவதும் நொறுங்கி போயுள்ளது. உள்ளே இருந்த 13 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், வாகனத்தில் சிக்கி இருந்த உடல்களை மீட்டுள்ளதோடு, பாதையை சீரமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது இமாச்சலப்பிரதேசம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 killed in rock fall on Tata Sumo in Himachal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->