காஷ்மீர் || பள்ளதாக்கில் கவிழ்ந்து விழுந்த பேருந்து.. 11 பேர் பரிதாப பலி..! 
                                    
                                    
                                   11 members death in accident
 
                                 
                               
                                
                                      
                                            பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா என்ற பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் 11 பேர் உயிரிழந்தனர்.மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       11 members death in accident