ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு கருத்து - பல்கலைக்கழக பேராசிரியருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.!!
14 days court custody to professor for tweet about operation sindoor
அரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத். இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அலிகான் முகமது மக்முதாவை மே 18 அன்று கைது செய்தனர்.
இந்த நிலையில், அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து சோனேபட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
English Summary
14 days court custody to professor for tweet about operation sindoor