உடல் எடையை குறைக்க.. அற்புதமான டீ.. 5 நிமிடத்தில் ரெடி.!  
                                    
                                    
                                   Yellow Tea special In Tamil 
 
                                 
                               
                                
                                      
                                            உடல் எடையை குறைக்கும் மஞ்சள் டீ எப்படி செய்வது என பார்க்கலாம். பல்வேறு முயற்சிகள் செய்தாலும் உடல் எடை குறைவதில்லை என்பது பலரது குறையாக இருக்கிறது. 
அந்த வகையில் உடல் எடை குறைய பெரிய அளவில் கை கொடுக்கக்கூடிய இந்த மஞ்சள் டீ எப்படி தயாரிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
தேன் - சிறிதளவு 
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :
தண்ணீரை ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். 
மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். 
அதன் பின் மூடிவிட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டி குடிக்கலாம். 
முடிந்த அளவு இனிப்பு சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி இனிப்பு சுவை தேவைப்பட்டால் தேன் கலந்து கொள்ளலாம் இவ்வாறு குடிப்பதால் உடல் எடை குறையும்.
மேலும், இது உடலில் சளி, இருமல் பிரச்சனைகள் இல்லாமல் காக்கும் குளிருக்கும் இதமாக இருக்கக்கூடும்.
                                     
                                 
                   
                       English Summary
                       Yellow Tea special In Tamil