இவர்கள் எல்லாம் பாதாமை சாப்பிட கூடாது., அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..! - Seithipunal
Seithipunal


சில உடல் உபாதைகள் உள்ளவர்கள் பாதாமை சாப்பிட கூடாது என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊட்டசத்து உணவுகளில் பாதம் குறிப்பிட தகுந்த இடத்தை பெறுகின்றன. சத்துக்களை அதிகம் கொண்டதுமான பாதாம் இடம் பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதாம் என்றால் விருப்பான ஒன்று.

நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்ட பாதாமானது இதயத்திற்கு நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

இப்படி பல நன்மைகளை கொண்ட பாதாமை ஆண்டி பயாடிக் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், லாக்ஸடிவ்ஸ் மாத்திரை சாப்பிடுவோர், அவற்றை உட்கொள்ளும் வரை தற்காலிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அல்லது அவர்களின் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடலாம் என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதாமில் மினரல்ஸ் உள்ளதால் அவற்றை மாத்திரையோடு தவறான கலவையாக மாறிவிடும் என ஊட்டசத்து நிபுணர் கூறியுள்ளனர்.அதேபோல் நட்ஸ் அலர்ஜி கொண்டவர்களும் , நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது.

இல்லையெனில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பாதாமை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who should avoid eating almonds


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->