அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்! தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்.! - Seithipunal
Seithipunal


வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்  கடுமையான உணவு கட்டுப்பாடு  கடைபிடிப்பதோடு குறித்த நேரத்திற்குள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அல்சர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடிய மற்றும் தவிர்க்கக் கூடிய உணவுகளை பற்றி பார்ப்போம்

அல்சர் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் டீ காபி மற்றும் பால் போன்ற சூடான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இந்த பானங்கள் வயிற்றினில் அமில காரத் தன்மை சமநிலையை சீர்குலைத்து விடும்  இதனால் அல்சர் இருப்பவர்கள் இந்த பானங்களை தவிர்ப்பது நலம்.

வயிற்றுப்புண் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை தவிர்க்க வேண்டும். ஆல்கஹாலை தொடர்ந்து அருந்தி வருவதால் அது அல்சரின் வீரியத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் மதுபானங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் சிட்ரிக் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை  போன்ற பழங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை பழங்களாகவோ அல்லது பல சாறுகளாகவோ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்தப் பழங்களில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை அல்சரை மேலும் தீவிரப்படுத்தும்.

மிளகு, மிளகாய் தூள், பூண்டு, காரமான மசாலா பொருட்கள் போன்றவற்றை  வயிற்றுப்புண் இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கக்கூடிய காரத்தன்மை அல்சரின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டி போன்றவற்றையும்  அல்சர் நோய் அடிகள் தவிர்த்துக் கொள்வது நலம்.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள்   சல்போரோபின் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடலாம். உதாரணமாக ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்பு கொண்ட தேன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது அல்சர் பிரச்சனையை கட்டுப்படுத்த இயலும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which foods ulcer patient should take and which should avoid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->