வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை மட்டும் வளராதுங்க.! அடேங்கப்பா, இத்தனை விஷயம் இருக்கா.?! - Seithipunal
Seithipunal


அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது. 

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். 

வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.

வெண்டைக்காயை, இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். 

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

Tamil online news Today News in Tamil
 
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம்.

வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uses of vendaikkai in different way


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->