வீட்டிலேயே அவசரகால மருத்துவமனை.. எப்படி சாத்தியம்?..!! - Seithipunal
Seithipunal


இப்போதுள்ள காலத்தில் எங்கு சென்றாலும் விபத்துகள் ஏற்படும் பட்சத்தில், முதலுதவி அளிக்க முதலுதவி பெட்டியானது இருக்கும். இதனைப்போன்று நமது இல்லத்தில் இருக்கும் மிகப்பெரிய முதலுதவி பொருளாக மஞ்சள் இருக்கிறது. மஞ்சள் சமையல் மட்டுமல்லாது, மருத்துவத்திலும் பெரும் உதவி செய்து வருகிறது. கிருமி நாசினியாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. 

மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, விரைவில் காயத்தை குணப்படுத்தும் தன்மை போன்றவை பெரும் உதவியை செய்கிறது. சிறிய அளவிலான வெட்டு காயத்திற்கு மஞ்சள் பயன்படுகிறது. காயம் ஏற்பட்டால் இரத்த கசிவை நிறுத்தவும், நோய் தொற்றை தடுக்கவும் மஞ்சள் தூள் பெரும் உதவி செய்கிறது. மஞ்சளை வெட்டுக்காயத்தின் மீது நேரடியாகவோ அல்லது தண்ணீரில் சேர்த்தோ அல்லது கடுகு எண்ணெய்யில் சேர்த்து கலந்து தடவலாம். 

பேக்கிங் சோடா நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கிறது. இது உடலின் அமிலத்தன்மையை சீராக்கி, மேற்கூறிய பிரச்சனைகளை சரி செய்கிறது. சிறிதளவு பேக்கிங் சோடவே, மேற்கூறிய நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். 
 
ஆப்பிள் வினிகரை சரும எரிச்சல் பிரச்சனைக்கு உபயோகம் செய்யலாம். வெளி இடங்களுக்கு சென்று வந்த பின்னர், வினிகரை தண்ணீரில் சேர்த்து கை மற்றும் கால்களை கழுவலாம். இது சரும எரிச்சல் பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரும். பூண்டை பூச்சி கடித்த பிரச்சனைக்கு பயன்படுத்தலாம். பூண்டில் உள்ள ஆண்டி பயாடிக் பண்புகள் மூலமாக நமைச்சல் மற்றும் அரிப்பு பிரச்சனையை சரி செய்கிறது. பூண்டை சாறு எடுத்தும் பூச்சி கடித்த இடத்தில் வைக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turmeric is good for emergency medicine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal