தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - Seithipunal
Seithipunal


பொதுவாக மாரடைப்பு என்பது  அறிகுறிகளுடன் வருவதில்லை. இந்தப் பிரச்சனையை  வயதானவர்கள் தனியாக வீட்டில் இருக்கும்போது அனுபவிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஃபோர்டிஸ் ஹார்ட் அண்ட் வாஸ்குலர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் டி எஸ் கிளர்  வழிமுறைகளை தெரிவித்திருக்கிறார்.

45 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள்  உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

மார்பு வலி வலது மற்றும் இடது கை வலி, தோள்பட்டை வலி ஆகியவை இருந்தால்  அலட்சியம் செய்யாதீர்கள். மேலும் இந்த மாதிரி நேரங்களில் உங்களது சுவாசத்தையும் கவனியுங்கள். இந்த மாதிரி நேரங்களில் சிலருக்கு குமட்டல்  வாந்தி மற்றும் விரைவாக சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவையும் உணர்வார்கள்.

இந்த மாதிரி நேரங்களில் பதட்டம் அடையாமல் நிதானமாக இருக்க வேண்டும். மேலும் ஆஸ்பிரின் மாத்திரையையும் (300 மி.கி.), க்ளோபிடோக்ரல் (300 மி.கி) மற்றும் அட்டோர்வாஸ்டாடின் (80 மி.கி) ஆகியவற்றை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்று  இசிஜி பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அறிகுறி தோன்றிய 30 நிமிடங்களுக்குள் ஆஸ்பிரின் மென்று சாப்பிடுவது பிளேட்லெட் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் இரத்த உறைவு உருவாவதை தாமதப்படுத்துகிறது. மேலும் மருந்துகளை மென்று சாப்பிடுவதன் மூலம் அவை நம் ரத்தத்தில் எளிதாக உறிஞ்சப்படுகின்றன.

இந்த மாத்திரைகளின் மூலம்  சமாளிக்கக்கூடிய அளவில் இருந்தால் முதலுதவியாக இந்த மாதிரி மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து நம்மை அழைத்துச் செல்லும் வரை காத்திருக்கலாம். மேலும் சில நேரங்களில் இரத்த அழுத்தம் குறைவதாலும் இது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில் சோர்பிட்ரேட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

things to do when we experice the symptoms of heart attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->