காலியாக இருந்த 800 ஓட்டுநர் பணி இடங்கள்! தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


800 ஓட்டுநர் காலி பணியிடங்கள் தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நிரப்பும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

தற்காலிக ஓட்டுனராக தமிழக சுகாதாரத் துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த நெப்போலியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவருடன் பணியில் சேர்ந்த மீதமுள்ள 65 பேரையும் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு நிரந்தர பணியமர்த்தம் செய்யப்படும் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. பேரிடர் காலத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் ஓட்டுநர்கள் என பல்வேறு துறையை சார்ந்த நபர்களின் நலனில் அக்கறை காட்டும் என அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது எங்களின் நலனில் எந்தவித அக்கறையும் அரசின் தரப்பில் காட்டப்படவில்லை.  நிரந்தர பணியமர்த்தம் செய்வதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதுமட்டுமில்லாமல்  காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசு முயற்சி எடுத்து வருகிறது என அவர் கூறினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் , தமிழக ஓட்டுநர் காலி இடங்களை நிரப்பவும் தற்காலிக பணியில் இருக்கும் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்வதை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதுகுறித்து வரும் ஜீலை28-ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The High Court has imposed a temporary stay on the filling of 800 vacant posts in the health department


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->