இரவு தூங்கப்போகும் முன் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.! - Seithipunal
Seithipunal


சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் குணம் கொண்டவை. எனவே தினந்தோறும் சப்போட்டா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு சப்போட்டா பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் தயாரித்து சாப்பிடலாம்.

சப்போட்டா, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாகும்.

சப்போட்டா பழக்கூழ் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது மற்றும் தாகத்தை தணிக்கவும் உதவுகிறது.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும் மற்றும் சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, போன்ற பிரச்சனைகள் சரியாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.

சளித்தொல்லையைப் போக்க சப்போட்டா பழச்சாறுடன் 2 டீஸ்பு+ன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட வேண்டும்.

சப்போட்டா பழத்துடன் கொய்யா, திராட்சை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை பெறும்.

சப்போட்டா பழத்தின் சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரிசெய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sappotta fruit for sleeping


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal