புளியை பயன்படுத்தி எப்படி அழகாவது.? - Seithipunal
Seithipunal


புளி வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி, சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பாதுகாப்பது என்பதைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி அதை மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். அதன் பயனாக செல்லுலைட் மறையும்.

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அவற்றை கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள், பின்பு 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்கி, முகம் பளிச்சென வெள்ளையாக இருக்கும்.

உங்களின் நிறம் முகத்தில் அதிகரிக்க வேண்டுமென்றால் புளிச்சாற்றில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

பலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை தொடர்ந்து செய்து வந்தால், கருமை நிறத்தை விரைவில் போக்கி விடலாம்.

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அடங்கி உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளிப்பதால், முதுமைத்தோற்றம் விரைவில் ஏற்படுவதைத் தடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puli facial in tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->