சிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.!  - Seithipunal
Seithipunal


முற்காலத்தில் இருந்தே மருத்துவத்திற்கும், அழகிற்கும் மருதாணி ஆனது பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுர்வேத குணங்கள் கொண்ட மருதாணியின் முக்கிய பயன்கள் குறித்து காணலாம்.

மருதாணி இலை அறியாத சிறு கிருமிகளை கூட நொடியில் அழிக்கும் தன்மை கொண்டது. இது நகசுத்தி வராமல் தடுப்பதற்கு புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த மருந்து. இது கை, கால், விரல்களை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.

தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிட கூடாது. மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தால், தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். சிலருக்கு இந்த மனமானது தலைவலியை உண்டாக்க கூடும்.

கைகால்களில் படர்தாமரை இருந்தாலும் இடுப்பில் அல்லது கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வரும் படர்தாமரை இருந்தாலும் ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் கதர் சோப்பு வைத்து அரைத்து களிம்பு போல அதன் மீது தடவி வந்தால் அனைத்தும் சரியாகும். குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நாட்களாக பயன்படுத்த வேண்டும்.

இதனை வண்டு கடிக்கும், சொறி, சிரங்கு உள்ளிட்டவற்றிருக்கும் பயன்படுத்தலாம்.

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மில்லி விட்டு இதன் இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிய பின் 10 கிராம் சந்தனத் தூளை அதில் போட்டுக் காய்ச்சலாம். இந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். நரை மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maruthaani payangal in tamil 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->