கண்ணாடியால் முகத்தில் கருப்பு தழும்பு, வடு உள்ளதா?.. இயற்கையான முறையில் சரி செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


இன்றளவுள்ள விஞ்ஞான உலகத்தில் பெரும்பாலான பணிகள் கணினிகள் சார்ந்த டிஜிட்டல் திரைகளின் வழியாகவே நடைபெறுகிறது. இதனை தவிர்த்து அனைவரும் சர்வசாதாரமான தொடுதிரை அலைபேசியை உபயோகம் செய்ய தொடங்கிவிட்டோம். மேலும், இணையங்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்ற சூழலுக்கு உள்ளாகிவிட்டோம். 

டிஜிட்டல் சாதனைகள் என்று அழைக்கப்படும் சாதனங்களை அதிகளவு உபயோகம் செய்ய தொடங்கியுள்ள நிலையில், இவைகளை தொடர்ந்து அதிக நேரம் உபயோகம் செய்வதால் கண்கள் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கண்ணாடிகள் அணிவது தவிர்க்க முடியாத பிரச்னையாகியுள்ளது. முந்தைய காலங்களில் பார்வை குறைபாடால் சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். 

ஆனால், இன்று அந்நிலை மாறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என தொடுதிரை அலைபேசி, கணினி போன்ற பொருட்களை அதிக நேரம் உபயோகம் செய்து, கண்களின் பார்வையை இழந்துள்ளனர். கண்ணாடி அணிபவர்களுக்கு மூக்கு பகுதியில் Frame அழுத்தத்தால் தழும்புகள் மற்றும் வடுக்கள் ஏற்படும். இதனை தவிர்க்க கற்றாழையை உபயோகம் செய்யலாம். 

கற்றாழையின் தோலை நீக்கி ஜெல்லை எடுத்து, வடுக்கள் உள்ள பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். உருளைக்கிழங்கின் சாறில் உள்ள கெடகொலெஸ் என்ற நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கரும்புள்ளிகளை அகற்றவும் உதவி செய்கிறது. 

உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து, அதன் சாறினை பஞ்சில் எடுத்து மூக்கு தழும்புகள் மீது தடவலாம். வாரத்தில் 4 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் கண்ணாடியால் ஏற்பட்டுள்ள தழும்புகள் குறையும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வடுக்கள் உள்ள பகுதியில் வைத்து 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவலாம். 

இதனைப்போல, எலுமிச்சை சாறில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் வடுக்களை நீக்கும். இதனுடன் சிறிதளவு தேனை கலந்து மூக்கு பகுதியை சுற்றிலும் அழுத்தமாக தடவ வேண்டும். இதன்போது, மூக்கு பகுதி குளிர்ச்சியான சூழலை அடைவதை உணரலாம். இந்த குளிர்ச்சி தன்மை நீங்கியதும் முகத்தை கழுவலாம். இதனால் கண்ணாடிகளால் ஏற்பட்டுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் நீங்கும்.

இன்றுள்ள சிறார்கள் பெரும்பாலும் இணையவழியில் கல்வி பயின்று ஏற்கனவே கண்கள் தொடர்பான பிரச்சனை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில், கண்களுக்கு குளிர்ச்சி வழங்கும் வகையில் உள்ள உணவுகளையும், உடலுக்கு அதிகளவு நன்மையை வழங்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Cure Eye Glass Black Frame Marks on Nose Area


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->