எந்தெந்த பூச்சிகள் மற்றும் விலங்குகள் நம்மை கடித்தவுடன் உடனடியாக விஷத்தை முறிப்பதற்கு என்ன செய்யலாம்?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நேரத்தில் பல விதமான மருத்துவமனைகள் நமது உடலுக்கு எந்த பிரச்சனை ஏற்பாட்டிலும் உடனடியாக அழைத்து சென்று நமது உடலை பாதுகாக்கிறோம். அந்த வகையில்., சில நேரங்களில் விஷ பூச்சிகள் நம்மை கடித்துவிட்டால்., மருத்துவமனை நீண்ட தூரத்திற்கு அப்புறம் இருக்கும் பட்சத்தில் சில கிராமிய வைத்தியங்கள் மூலமாக குணப்படுத்த இயலும். 

தேள் கடித்தால் செய்ய வேண்டியவை: 

தேள் நம்மை கடித்துவிட்டால் எலுமிச்சை பழத்தின் விதைகளை எடுத்து கொண்டு சிறிதளவு உப்பை சேர்த்து அடித்து குடித்தால் தேளின் நஞ்சானது நமது உடலை விட்டு வெளியேறும். 

தேள் கடித்து வெளியேறும் இரத்தத்தின் துவாரத்தில் புளியங்கோட்டையில் சிறிதளவு நீரை விட்டு தேய்த்து தேள் கடித்த இடத்தில வைக்கும் பட்சத்தில் புளியன்கொட்டை நன்றாக ஒட்டிக்கொண்டு தேளின் விஷம் இறங்கியவுடன் கீழே விழுந்துவிடும். 

சிறிதளவு நாட்டு வெல்லத்தை எடுத்துக்கொண்டு வெல்லத்தை சேர்த்து சுண்ணாம்பு மற்றும் புகையிலை சேர்த்து கசக்கி தேள் கடித்த இடத்தில் வைத்தால் விஷத்தின் வீரியமானது இறங்கும். 

நட்டுவக்காலி மற்றும் பூரான் கடித்தால் செய்ய வேண்டியவை: 

நட்டுவக்காலி நம்மை கடித்து விட்டால் கொப்பரை தேங்காயை எடுத்துக்கொண்டு வாயில் மீண்டும் உண்டால் உடலில் இருக்கும் நஞ்சானது நீங்கும். அது மட்டுமல்லாது பூரான் கடித்தால் பானை வெல்லத்தை சாப்பிட்டால் விஷத்தின் வீரியத்தால் ஏற்படும் அரிப்பானது சரிவரும். 

வெறிநாய் கடித்தால் செய்ய வேண்டியவை: 

வெறிநாய் நம்மை கடித்துவிட்டால் நாயுருவி செடியின் வேறை எடுத்து எலுமிச்சம்பழத்தின் விதைகளை சேர்த்து அரைத்து காலையும் மாலையிலும் ஒரு உருண்டை வீதமாக சுமார் 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெறிநாய்கடியானானது குணமாகும். 

நல்ல பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை: 

நல்ல பாம்பானது நம்மை கடித்து விட்டால் வாழைப்பட்டைகளை பாய் போல பரப்பி வைத்து பின்னர் வாழைப்பட்டையின் சாற்றை கொடுத்தால் விஷமானது முறிய துவங்கும். 

வண்டு மற்றும் எலி கடித்தால் செய்ய வேண்டியவை: 

வண்டு நம்மை கடித்து விட்டால் கார வெத்திலையை எடுத்து கொண்டு சுமார் 8 மிளகுகளை சேர்த்து கொண்டு சாப்பிட்டால் வண்டின் விஷமானது குறையும். அடுத்தபடியாக எலி நம்மை கடித்து விட்டால் வெள்ளெருக்கமால் பாலை அந்த இடத்தில் தடவினால் விஷமானது முறியும். 

பூனை கடித்துவிட்டால் செய்ய வேண்டியவை: 

பூனை நம்மை கடித்துவிட்டால் முதலில் குப்பை மேனி இலையை எடுத்து கொண்டு பசும்பால் விட்டு நன்றாக அரிது எடுத்து கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் பூனை கடித்த விஷமானது குறையும். 

எந்த விதமான விஷத்தையும் வாந்தி  மூலமாக வெளியேற்றும் முறை: 

நம்மை எந்த பூச்சிகள் மற்றும் விலங்குகள் கடித்து விட்டாலும் அதனை வாந்தியின் மூலமாக வெளியேற்றலாம். வாந்தியை வரவழைப்பதற்கு நஞ்சிலை பறிச்சான் செடியின் வேறை எடுத்து கொண்டு நன்றாக அரைத்து எலுமிச்சை பழத்தின் அளவாக இருக்கும் படி கொடுத்து வெண்ணீரை வழங்கினால் வாந்தி வந்து அணைத்து விஷமும் வெளியேறும். நன்றாக வாந்தி எடுத்த பின்னர் எலுமிச்சை பழச்சாற்றை தண்ணீரில் பிழிந்து கொடுத்தால் நஞ்சானது முறியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HOW TO CURE AFTER INSETS AND ANIMALS BYTE POISON


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->