ஆண்மைக்குறைவு மலட்டுத்தமையை நீங்க காதல் சின்னம் முதல் ஆல் வரை...!! "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க"..!!
how to cure aanmaikuraivu and malatuthanmai naturally
நமது இளமையான பருவத்தில் எந்த விதமான எதிர்கால சிந்தனையும் இன்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு., திருமணத்திற்கு பின்னர் பெரும் பிரச்சனையாக குழந்தை பிரச்சனை உள்ளது. இதனால் பல நேரங்களில் குழந்தைகள் இல்லாத தம்பதியினர் தர்ம சங்கட நிகழ்விற்கு உள்ளாகவும் நேரிடும். குழந்தையின்மை பிரச்சனைக்கு மருத்துமனைக்கு சென்று தீர்வு காண வேண்டும் என்ற அவசியமில்லை. நமது முன்னோர்களின் கூற்றுப்படி வீட்டில் எளிய மருந்துகளை தயார் செய்து பருகினால் போதுமானது. அந்த வகையில்., மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

இன்றளவும் பெரும்பாலானோருக்கு தெரிந்த காதல் சின்னமாக., காதலர் தினத்தில் காதலை வெளிப்படுத்தும் சின்னமாக இருப்பது ரோஜா..... ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து எனப்படும் மருந்தானது இதயத்திற்கு நல்ல பலத்தையும்., ஆண்மை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. இதுமட்டுமல்லாது உடலின் வலிமையை அதிகரிக்கிறது. ரோஜா இதழில் இருக்கும் எண்ணெயானது ஆண்மையின் வலிமையை அதிகரிக்க அதிகளவு உதவி செய்கிறது. பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருதகத்தில் பூசணிக்காயின் நன்மைகளை அறிந்தே லேகியமாக தயாரிக்கின்றனர். இந்த லேகியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரிக்கும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மைகுறைபாட்டை நீக்கி., ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. பூசணிக்காயின் விதையை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தாது விருத்தியடையும்.

கிராமப்புறங்களில் கேட்பாரற்று கிடைக்கும் ஆலம்பலத்தில் மலட்டுத்தன்மையை நீக்கக்கூடிய அளப்பரிய சக்தியானது உள்ளது. ஆலமரத்தில் இருக்கும் கனிந்த பழங்களை பறித்து., பழத்தில் இருக்கும் பூச்சியை நீக்கி நிழலில் நன்றாக உலரவைத்து., இடித்து பொடி செய்து தினம் காலை மற்றும் மாலை வேளையில் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் 48 நாட்களில் மலட்டுத்தன்மையானது நீங்கும். புத்திர பாக்கியமும் எளிதாக கிடைக்கும். நாம் வாழும் வாழ்க்கையானது எத்துனை முறை என்பது நமக்கு கட்டாயம் தெரியாது. வாழும் வாழ்க்கையை நமக்காகவும்., நமது பிள்ளைகள் மற்றும் மனைவிக்காக நேர்மையுடன் வளமாக வாழ வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
how to cure aanmaikuraivu and malatuthanmai naturally