மார்பக புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன?.. தவிர்ப்பது எப்படி?..!!  - Seithipunal
Seithipunal


புற்றுநோய் என்பது ஒரு கால கட்டங்களில் அரிதான நோய்யாக இந்தியாவை பொறுத்த வரையில் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிலையானது தற்போது மாறி பெண்களுக்கு அதிகளவில் ஏற்பட துவங்கியுள்ளது. இந்த புற்றுநோய் எதற்கு ஏற்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. 

புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்கள் ஈஸ்டிரஜன் எனப்படும் ஹார்மோனின் மூலமாக தனது வளர்ச்சியை பெருக்கி பரவக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்கள் இயற்கையாகவே 9 வயதிற்கு முன்னதாக பருவமடைவது அல்லது நீண்ட வருடங்கள் கடந்த பின்னதாக., அதாவது 55 வயதிற்கு பின்னர் பருவமடைவது காரணமாக பெண்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய்யானது ஏற்படுகிறது. 

மார்பக புற்றுநோய், breast cancer, மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள், how to cure breast cancer,

மேலும் திருமண வயதை தள்ளிப்போட்டு 30 வயதிற்கு மேலாக குழந்தைகளை பிரசவிப்பதன் மூலமாகவும் இந்த பிரச்சனை ஏற்படவாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது., திருமணத்திற்கு பின்னர் பெண்களின் எடை விசயத்தில் கவனகுருவாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. பெண்மையை தக்கவைப்பதற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் ஆடம்பரத்திக்காக அருந்தும் மதுக்களின் மூலமாகவும் மார்பக புற்றுநோய்யானது மிக எளிதாக உருவாகிறது. 

உணவுக்கட்டுப்பாடில்லாதது., உடலின் எடை அதிகரித்தல்., புகைப்பழக்கம் மற்றும் போதை பொருட்கள் உபயோகம் செய்தல் போன்ற பழக்கமானது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது மார்பக புற்றுநோய் பிரச்சனையை பாதியாக குறைக்கிறது. மேலும்., உடலுக்கு தகுந்த எடையானது இல்லாத பட்சத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படலாம். 

மார்பக புற்றுநோய், breast cancer, மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள், how to cure breast cancer,

18 வயதில் இருந்து சரியான எடை இல்லாத பிரச்சனை., மாதவிடாய் இறுதி சுழற்சி சமயம் போன்ற காலங்களில் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. மேலும்., அளவுக்கு அதிகமான எடையின் காரணமாக ஈஸ்டிரோஜன் அளவு அதிகரித்து புற்றுநோய் ஏற்படும். மேலும்., பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களை அளித்து உடலை பாதுகாக்கிறது. காய்கறிகளில் கேரட்., தக்காளி., தர்பூசணி மற்றும் கீரைகள் அதிகளவு சாப்பிட வேண்டும். சோயா பொருட்கள் மூலமாகவும் பல பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.

மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதற்காக புளுபெரீ பழத்தை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகளின் மூலமாக புற்றுநோயின் செல்களுக்கு எதிராக செயல்பட்டு., புற்றுநோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து நமது உடலினை பாதுகாக்கிறது. தினமும் உண்ணும் உணவில் காளான்கள் சேர்ந்தால் நல்லது. இதன் மூலமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் தாக்கமானது தவிர்க்கப்பட்டு., மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை குறைகிறது. 

மார்பக புற்றுநோய், breast cancer, மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள், how to cure breast cancer,

புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிப்பதற்கு பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் மாதுளையை சாப்பிட வேண்டும். பச்சை இலை காய்கறியில் இருக்கும் வைட்டமின் பி., நார்சத்து., பைட்டோ கெமிக்கல் மற்றும் குளோரோபைல் சத்துக்களின் காரணமாக புற்றுநோயின் செல்கள் அளிக்கப்பட்டு நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது. பூண்டை சாப்பிட்டு வந்தால் பூண்டில் இருக்கும் ஆலுயத்தின் காரணமாக குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயின் செல்களை அழித்து நமது உடலை பாதுகாக்கிறது.  

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டியின் மூலமாக மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பினை சுமார் 17 விழுக்காடு அளவிற்கு குறைக்கிறது. கிரீன் டீயில் இருக்கும் பலிப்பினால் என்ற வேதிப்பொருள் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது. தினமும் சமையலில் உபயோகப்படும் பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு நிற மிளகாயை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் நமது உடலை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் கட்டாயம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வழங்குங்கள். தயவு செய்து எந்த ஒரு காரணத்திற்காகவும் தாய்ப்பாலை வழங்காமல் இருக்காதீர்கள். தாய்ப்பாலை வழங்காமல் இருந்தால் புற்றுநோய் கட்டாயம் ஏற்படும். 

மார்பக புற்றுநோய், breast cancer, மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள், how to cure breast cancer, தாய்ப்பால், breast milk,

மார்பகத்தை மாதத்திற்கு ஒருமுறை சுயமாக சோதனை செய்துகொண்டு அதன் மூலம் மார்பகத்தில் மாற்றங்கள் ஏதும் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் மார்பகத்தில் நீர்க்கசிவு மற்றும் இரத்த கசிவுகள் ஏதும் இருப்பின் உடனடியாக தங்களின் தாயார் அல்லது கணவரிடம் விசயம் குறித்து கூறிவிட்டு மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது. எந்த ஒரு விசயத்தையும் வருமுன் காத்தலே நமக்கு நல்லது. முடிந்த அளவிற்கு அழகிய தோற்றத்தை தரும் (இறுக்கமான) ஆடைகளை துறந்து., காற்றோட்டமான பாரம்பரிய ஆடைகளை அணிவது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to avoid breast cancer


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal