நீட் தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்...! இனி ஒரு போன் காலில் கிடைக்கும் அரசு உதவி...!
Happy news NEET aspirants Now government assistance available just phone call away
2026–27 கல்வியாண்டிற்கான நீட் மறுதேர்வு நாளை அதாவது (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் மனஅழுத்தம் மற்றும் பதற்றமின்றி முழு தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன உறுதியை வலுப்படுத்தவும், தேர்வு தொடர்பான அச்சம் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கவும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டத்தின் கீழ் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வு குறித்த கவலை, பதற்றம் அல்லது மனஅழுத்தத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர் எவ்வித தயக்கமும் இன்றி 14416 அல்லது 104 ஆகிய உதவி எண்களை தொடர்புகொண்டு மனநல ஆலோசனைகளை பெறலாம்.பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மூலம் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மனநிலையை சீராக வைத்திருப்பதற்கும், அவர்களின் நலனை பாதுகாப்பதற்கும் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Happy news NEET aspirants Now government assistance available just phone call away