தூங்கி எழுந்தால் தலை வலிக்கிறதா? உஷார்.. இந்த நோயாக இருக்கலாம்.! - Seithipunal
Seithipunal


பலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாவார்கள். தூங்கி எழுந்தாலே சிலருக்கு தலைவலி ஏற்படுவது வழக்கம். 

இது அன்றைய நாளையே கெடுத்துவிடும் அளவிற்கு பிரச்சினையாக மாறும். இந்த தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ரத்த அழுத்தமாக இருக்கலாம். 

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீரற்று இருந்தால் தலைவலி ஏற்படக்கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கின்ற நேரத்தில் தலைவலி அதிகமாக இருக்கும்.எனவே இவர்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

ரத்த சோகை ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு குறைவாக இருந்தால் காலையில் எழுந்தவுடன் தலைவலி ஏற்படலாம்.

அதுபோல உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் கூட சோர்வுடன் தலைசுற்றல், தலைவலி உள்ளிட்டவை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தால் காலையில் எழுந்தவுடன் தலைவலி ஏற்படக்கூடும். 

சர்க்கரையின் அளவு சரியாக இல்லை என்பதை உணர்த்தக்கூடிய காரணியாக இது இருக்கும். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் கூட தலைவலி ஏற்படும். உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும்.

தூக்கமின்மையினால் தலைவலி ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்பட்டு பலருக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. அவர்கள் காலையில் எழுந்தவுடன் அதிக தலைவலிக்கு உள்ளாக நேரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Getting headache after sleep


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->