ஆசையா ஒரே ஒரு பீர் மட்டும் குடிப்பவரா நீங்கள்.?! இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கின்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இதற்கு அடிமையாகும் அவலநிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதிலும் சிலர் நான் பீர் தானே அருந்துகிறேன் அதனால் என்ன பிரச்சனை என கேட்பதும் வழக்கம்தான். அனால் அதுதான் அடிமையாவதற்கு அடித்தளம்.

தற்போதைய சூழலில் மதுவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பீர் தானே சாப்பிடுகிறோம் என நினைப்பார்கள். ஆனால், அது உடம்பில் சென்றால் அதுவே வியாதியாக மாறிவிடும். எனவே மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மேலும், பீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரைக்கப்படுவதாகவும் மருத்துவம் கூறுகிறது. சிலிக்கன் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பீரீல், காணப்படுகின்றன. எனவே அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் அதனை அதிகம் அருந்துவதால் சிறுநீரகம் பாதிப்படைய கூட வாய்ப்புள்ளது.
 
தண்ணீர் அதிக அளவு குடிப்பதே உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. தயவு செய்து மது அருந்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு மது அருந்துபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை சார்ந்த அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுத்தும்.

தற்போதைய வாழ்கை முறையில் குழந்தையின்மை பிரச்னைகள் அதிகமாக நிலவி வருகிறது. அதற்கு முதல் காரணம் இந்த மது தான். ஆனால் இந்த மதுவினை அரசாங்கமே விற்பனை செய்வதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இன்றளவும் பல அரசியல் தலைவர்கள் மதுவினை ஒழிப்பதற்கு அரும்பாடுபட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drinks habit starts from one beer


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal