பாலியல் உறவினால் டெங்கு பரவுமா..?! உஷார் உங்களுக்கும் வரலாம்.!  - Seithipunal
Seithipunal


முறையற்ற அல்லது பாதுகாப்பற்ற உறவால் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள், ஒருசில பாலியல் நோய்கள் பரவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தற்போது பாலியல் உறவு மூலமாக தீவிரமாக பேசப்பட்டு வரும் டெங்கு காய்ச்சலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டில் இருக்கும், மேட்ரிட் என்ற பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு நோய் தோற்று ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து இருக்கின்றனர். 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது தன்னுடைய ஆண் நண்பருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், தான் அவருடன் உறவில் ஈடுபட்ட பிறகு தனக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். எப்படி பாலியல் உறவால் டெங்கு பரவும் என்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ளாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையை அழைத்து பரிசோதித்து இருக்கின்றனர். 

அந்த ஆண் நண்பரின் விந்தணுவை சோதனை செய்த போது அதில் டெங்கு கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பாலியல் உறவு மேற்கொண்டால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு டெங்கு வைரஸ் பரவுகின்றது என்பதை கண்டறிந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can dengue be transmitted through sex


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->